எதிர்பாரா ஒரு சந்திப்பு ….

எதிர் பார நிகழ்வுகள் வாழ்கையை மிகவும் சுவாரசியமாக்கும். அப்படி எதிர் பாராமல் புத்தக கண்காட்சியில் கவிஞர் வைரமுத்துவின் மகன் பாடல் ஆசிரியர் மதன் கார்கியை சந்தித்தது சுவாரசியம் 🙂

கார்கி – ரஷ்ய மொழியில் துவர்ப்பு
தமிழ் சினிமா விருந்தின் இனிப்பு!
வைரம் பெற்றெடுத்த முத்து..
தமிழுக்கு அவர் எழுதி வைக்கா சொத்து!
நான் கேட்ட அவன்  தமிழின் உச்சரிப்பு
கவிதை ஒன்றை எழுதும் படி மனம் ஒரே நச்சரிப்பு
கண்டது அவன்  கண்களில் பரிவு
அது ஒரு அற்புத நிகழ்வு
விளைவு –
நீண்ட நாட்களுக்கு பின் தமிழில் எனது பதிவு

IMG_20150116_181338171_HDR

ஆணே நாளை நீயும் ….

சில பாடல்களின் இசை  நம் மனதிற்கு இதமாக இருக்கும் ,மற்றும் சில  நமக்கு  புத்துணர்ச்சி தரும் .இன்னும்  சில  பாடல்களின்  வரிகள்  நம்  நடைமுறை  வாழ்கையோடு  ஒத்து  போகும்  .மற்றும்  சிலவற்றை  கேக்கும்  போதோ  நமக்கு நம்  வாழ்க்கை  இது  போல் , அமைந்தால்  சுகம்  என்று  நினைக்க  தோன்றும்  .ஆனால் சில   பாடல்  வரிகள்  கேட்கும்  போதோ  நம்  வாழ்க்கையே   அது  பிரதிபளிக்கும் !! அறிவு  கண்களுக்கு  பூட்டு  போட்டு ஆழ்மனதில்  உள்ள  நம்  உணர்வுகளை  தட்டி  எழுப்பி  , கண்களில்  ஆனந்த  கண்ணீர்  ஊற்றை உருவாக்கும்  !!! நீங்கள்  நினைப்பது  நிஜம்  தான்  ..நிச்சயம்  இது காதல்  பாடல்களுள்  ஒரு  பிரிவு  தான். ஆனால் இது  தந்தைக்கும் மகளுக்குமான  காதல்  !! அப்படி  என்  அறிவு  (அறிவா??!! உனக்கு  இருக்கா?  என்று  சந்தேகம்  படும்  மக்களே  ..கொஞ்சம்    மக்கி  இருந்தாலும்  என்  அறிவு  இருக்கவேண்டிய  இடத்தில்  பத்திரமாக  தான்  இருக்கு  😉 !!)  கண்களுக்கு  பூட்டு  போட்டு  என்  ஆழ்  மனதில்  உள்ள  உணர்வுகளை   தட்டி  எழுப்பிய  பாடல்  “ஆனந்த  யாழை  மீட்டுகிறாய்  அடி  ஆயிரம் வர்ணம்  தீட்டுகிறாய்  “ –(படம்  தங்க  மீன்கள் ).

என்னை  பொறுத்த  வரை   ஒரு  ஆண் அவனது  சொந்த  பெண்  குழந்தையை முதன் முதலில்  கையில்  வாங்கி  பூரிப்படைகிரானோ  அன்றே  அவன்  சொர்கத்தை  பார்த்துவிடுகிறான்  !  இயற்கையாகவே  மகன்  தாயிடமும்  ,மகள்  தந்தையிடும்  ஏற்படும்  பிணைப்பு  ஒரு  தனி  உணர்வு  தான் . எந்த  ஒரு  பெண்ணின்  முதல் ஹீரோ  காதலன்  காவலன்  அவர்களது  தந்தையாக  தான் இருக்கும் . சிறு  வயது  தொடங்கி  மணம்  முடித்து  மாங்கல்யம்  ஏற்ற  பின்னும்  ஒரு  பெண்ணின்  மனதில்  சிம்மாசனம்  போட்டு  அமர்திருக்கும்  ஆண்  மகன்  அவர்களது  தந்தையாகவே  இருக்க  முடியும் . நான்  பார்த்த  வரை  நம்  இந்திய  கலாச்சாரமா  அல்லது  தமிழ்  நாட்டு பண்பாடா  என்று  தெரிய  வில்லை  ,ஒரு  பெண்  குறிப்பிட்ட  வயதை  எட்டிய  உடன்  அவள்  தந்தை எவ்வுளவு  பாசகாரராக  இருந்தாலும்  அதை  வெளிபடுத்துவதை  குறைத்தே  கொள்கிறார்  .சம்மீக  காலமாக  மகள்  தந்தை  பாசத்தை  வெளி  கொண்டு  வருவது  போல்  பாடல்கள்  பல  வந்துகொண்டு  தான்  இருக்கிறது  .

ஆரிரோ ஓ ஆரிரோ  என்று  தாலாட்டில்  தொடங்கி  (படம்  :தெய்வ  திருமகள் ) ,தேவதை , நட்சத்திரம் (வா வா  என்  தேவதையே  , படம்  : அபியும்  நானும் ) என  வர்ணிப்பதோடு  மட்டும்  நிக்காமல்  அந்த  நிலவிர்க்கே  அவன்  மகள்  ஆறுதல்  கூறி  வீட்டுக்கு  நலபடி  அனுப்பி  வையடி (ஆனந்த யாழை  மீட்டுகிறாய்  ,படம்  :தங்க  மீன்கள் )  என்று   நம்  தமிழ்  நாட்டு  தந்தைகள்  மனதினுள்  பூட்டி  கிடக்கும்  பாசத்தை  அழகாய் சாவியில்லாமல்  திறந்து  காட்டுகிறது  நம் தமிழ்  சினிமா  !! அதோடு  நிற்காமல்  என்னை  இந்த  தொகுப்பையும்  எழுத  வைத்தது  !!

Image

ஒரு  பெண்  எத்துனை  பெரிய  பதவியில்  இருந்தாலும்  ,எத்தனை  சாகசங்கள்  செய்ததாலும்  அவள்  தந்தையின்  கண்களுக்கு  ஒரு  சிறு  பிள்ளை  தான்  .அவள்  பொறுப்பற்று  வெகுளியை   சுற்றிநாளும்  அவன்  பாசம்   அதை  பொறுத்து  நாடக்கும்  படி  செய்து விடும் . பொதுவாக  பெண்களுக்கு  இரக்க  குணம்  பிறப்பிலையே அதிகம்  இருக்குமாம்  ஆனால்  ஒரு  பெண்ணை  பெற்ற  தந்தையின்  மனமோ  அதை  விட  மெலிதான  ஒன்று  ! முதல்  முதலில்   அவளை  கையில்  தூக்கி  முத்தம்  கொடுக்கையில்  அவன்  மனம் அடையும்  பூரிப்பும்    கண்களில்  சுரக்கும்  தேனும்  (ஆனந்த  கண்ணீர் ) வார்த்தைகளில்  வர்ணிப்பது  கடினம் !

Image

முதன்  முதலில்  நடக்க  பழகும்   போது  விழுகையில்  அவளை   தாங்கி பிடிக்கும்  போதும்  ,சைக்கிள்  ஓட்டி  பழகும்  போது  அவள்  விழாமல்  இருக்க பின்னாடி  ஒடும்போதும்  , அவள்  படிப்பிற்காக  இரவு  பகல்  பாராமல்  ,சில  நேரங்களில்  அவளை  கூட  பார்க்க  முடியாத  தூரத்தில்  அவளுக்காக  உழைப்பதும்  என  எல்லா  தந்தையும்  மௌனமாய்  தினனும்  தங்கள்  பாசத்தை  வெளிப்படுத்தி  கொண்டு  தான்  இருகின்றனர்  !அப்படி  பட்ட  ஆணின்  நெஞ்சம்  அவள்  வீடு  திரும்ப  சற்று தாமதமானாலும்  தவித்து  விடுவான் . அவள்  பத்திரமாக  வீடு  திரும்பிய  பின்னே  அவள்  மனதில்  எழுந்த  சுனாமிகளின்  தாக்கம்  சீராகும் .அவனை பொறுத்த வரை அவள் சிறு பிள்ளையே ,அந்நேரத்தில் அவளை அள்ளி முத்தமிட  மனம் ஏங்கி விடும் . மகளை  பெற்று  எடுக்கும் ஒவ்வொரு  தந்தையும்  தயுமாணவனே ! அவனுக்கு மட்டுமே புரியும் பாசமாய் கொடுக்க நினைக்கும் முத்தம் காமத்தை சேர்ந்ததல்ல என்று! ! ஆனால் ஆயிரம்  கனவுகளோடு   வாழும்  மகள்  நிரந்தரமாக  வீடு  திரும்பாமல் சில காம வெறி பிடித்த மிருங்களிடம் சிக்கி சின்ன பின்னமாகியத்தை அறியும்  போது   அவனின்  கதி  ??!!??.  ஒரு  பெண்ணை பொத்தி   காப்பதும்  ஆண்  ஒரு  பக்கம் ,  அவள்  கேட்டு  சீரழிந்து  உயிரை  விட  காரணமாக  இருக்கும்  ஒரு  மறுபக்கம் !!   பெண்களை  வேட்டை  ஆடும்  ஆண் சமூகத்திற்கு ஒரு  எச்சரிக்கை  …

 

new

நாளை  நீயும்  ஒரு  பெண்ணிற்கு தந்தையாகலாம்  !!

This entry was posted on August 24, 2013. 2 Comments

குடைக்குள் மழை -1

Image
அவள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரம் . சுவாரசியங்கள் பெரிதாய் ஏதும் இன்றி சுமாராகவே வாழ்கையை தள்ளி கொண்டிருந்தாள் கமலா . காதல் தோல்வி அடைந்த ஒரு பெண்ணின் மனம் எத்துனை எத்துனை சுராவெளிகளை சந்தித்தாலும் அதை வெளியில் காட்ட இன்னும் நம் சமூகம் முழுதாய் அனுமதிக்கவில்லையே ! அவளை பொறுத்தவரை  உண்மையாய்  காதலிப்பவர்கள் அதை வெளியில் காட்டிக்கொள்ள விரும்புவது இல்லை .  மேலும் அவள் பார்த்தவரை இந்த காலத்தில் உண்மையாய் காதலிப்பவர்களும் இல்லை . அதற்கு உதாரணம் அவள் உயிர் தோழியின் பிரிவு . சிறு வயது முதல் ஒன்றாய் வாழ்ந்த விமலாவின் பிரிவிற்கு பின் இன்று இவள் மட்டும் இவ்வுலகில் ! தனிமையின் துணையோடும் பழைய நினைவுகளால் வலியோடும் தினுமும் வீடு திரும்பிய கமலா படும் இன்னல்களை பார்த்து இன்று பொறுக்க முடியாமல்  விரசமாய்  அழ தொடங்கியது வானம் .இவள் மனதில் ஏற்பட்ட பிளவை குறித்தது வனத்தில் இடித்த இடி !! இப்படியெல்லாம் நடப்பது கதைகளில் தானே ! உண்மையில் அது மழை காலம் . ஆதலால் மழை சற்று பலமாகவே பெய்தது.

சாதா நாட்களில் மழையை பார்த்து துள்ளி குதிக்கும் அவளது மனம் சோர்ந்த படி இருக்க ,அவள் கண்கள்  தஞ்சம் புக இடம் ஒன்றை தேடி அலைந்தது .விடாமல் பெய்யும் மழையிலிருந்து தன்னை நனையாமல்  காத்து கொள்ள அருகில் இருந்த பேருந்து நிறுத்தம் ஒன்றை நோக்கி ஓடினாள்  . நிறுத்தம் ஒதுங்க ஒரு இடமாயினும் சாரல் அவள் மீது தெறித்து கொண்டுதான் இருந்தது.நிறுத்தத்தில் இன்னும்  ஒருவர் மட்டும்  குடை பிடித்து நின்று கொண்டிருந்தார் .
ஆண்களை வெறுக்க தொடங்கிய அவளின் மனம் பதைபதைத்தது . வெளியில் காட்டிக்கொள்ளாமல் நின்றாள் . அவன் பார்க்க கரடு முரடாக கம்பீரமாக இருந்தான் . குடைக்குள் வர வேண்டுமா என கேட்காமல் அவளிடம் சைகை மட்டும் செய்தான் . அவள் முறைத்து விட்டு முகத்தை திருப்பி கொண்டாள் .பழகிய ஆண்களே  நம்ப முடியாத காலத்தில்  தெரியாத ஒரு ஆணை நம்ப அவள் மனம் மறுத்தது .

பதினைந்து இருபது நொடிகள் ஓடியும் மழையின் வேகம் குறைவதாய் இல்லை .மாறாக சாரல் பலமாக வீச அவள் குளிரில் நடுங்கவும் தொடங்கினாள் . நேரம் ஓட ஓட அவளால் குளிர் தாங்க முடியவில்லை ,சாரலும் அவளை நனைத்து கொண்டே இருக்க வேறு வழி இன்றி அவனை பார்த்தால் கமலா.

அவன் குடைக்குள் வரும்படி கண்களால் அழைக்க அவளும் அதனுள் தஞ்சம் புகுந்தாள் .அருகில் சென்றாலே தவிர அவன் பேச முயற்சிப்பின் திட்டி தீர்த்து விடவேண்டும் என்ற முடிவில் தான்  இருந்தாள் .சுமார் 3 மணி நேரம் இருவரும் அந்த இடத்தில் நின்றனர் .இந்த  3 மணி நேரத்தில்  அவன் ஒரு வார்த்தை கூட பேச முயற்சி செய்யாமல் இருந்தது அவளுக்கு ஆச்சர்யத்தை தந்தது . சற்று நேரத்தில் மழையின் வீரியம் குறைய அவள் அந்த இடத்தை விட்டு அகன்றாள்  .

இடத்தை விட்டு வந்தாலே தவிர அவள் மனம் முழுதும் அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த முரடன் நினைப்பாகவே  இருந்தது . மறுநாள்  அவள் அலுவலகம் விட்டு வீடு திரும்புகையில் மறுபடியும்  மழை… அதே முரட்டு மனிதன் அதே பேருந்து நிறுத்தத்தில் குடையுடன் நின்று கொண்டிருந்தான் . இம்முறை இவள் குடையுடன் வந்ததால் அந்த நிறுத்ததிற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை . இருந்தும்,அவள் மனம் அவனை பற்றிய நினைவுகளில் மிதந்து கொண்டு இருந்தது .அவனது முந்தைய நாள் 3 மணி நேர மௌனம் அவளை ஏதோ செய்தது . அடுத்த ஒரு வாரம்  அவன் அதே இடத்தில் குடையுடன் நிற்க இவளுக்கு அவன் தனக்காக நிற்பதாக ஒரு ஐயம் எழுந்தது . அவனும் அவள் அந்த நிறுத்தத்தை தாண்டும் போதெல்லாம் இவளை பார்க்க தவறவில்லை .அவனிடம் பேச வேண்டும்மென இவள் மனதில் ஆசை துளிர் விட்டது .

முதலில் முரடனாக தெரிந்த அவன் இன்று பரிச்சயமான முகமாய் , நாகரீகமான மனிதனாய் தெரிய ஆரம்பித்தான் .ஒரு நாள் அந்த நிறுத்ததிற்கு சென்று குடையை மறந்து விட்டதாக அவனிடம் அசடு வழிந்தாள் .அவன் மெல்லிதாய் ஒரு சிரிப்பு சிரிக்க அவள் தன்னையே ஒரு நிமிடம் மறந்து போனாள் !!

” இத்தனை வசீகர புன்னைகை கொண்டவனையா முரடன் என்று நினைத்தாய் ?!?” என்று கமலாவின் மனம் அவளை திட்டியது . “உன் மொத்த அழகையும் உன் ஓர புன்னகையில் ஒளித்து வைத்தது மட்டுமில்லாமல் அதை என்னிடமிருந்து இத்தனை நாள் மறைத்து வைத்து விட்டாயேடா கள்வா! ” என்று அவள் மனதில் அவனை  செல்லமாக  கோவித்து கொள்வதை உணர்ந்த கமலாவின் மூளை அவளை சுய நினைவிற்கு கொண்டு வந்தது . தன்னையும் அறியாமல் அவள் மனது இப்படி நினைத்து விட்டதே என்று ஒரு நிமிடம் கூனி குறுகி போனால் கமலா .தன் உயிர் தோழி ஒருவனை நம்பி இறுதியில் உயிரை விட்டது நினைவிற்கு வர , மனதை கல்லாக்கி முகத்தை திருப்பி கொண்டாள் கமலா .

ஒரு வேலை இவன் நம்மை பின்தொடரவே தொடர்ந்து ஒரு வாரமாக இந்த நிறுத்தத்தில் காத்திருகிரானோ ? அது புரியாமல் இவனிடம் நீயே  பேச்சு கொடுத்து விட்டாயே  என்று அவள் மூளை அவளை கடிந்து கொண்டது . தெருவில் பார்த்த யாரோ ஒருவனை பற்றியே அவளது எண்ண ஓட்டங்கள் இருப்பதை நினைத்து அவள் குழம்பி இருக்க “யாரோ இவன் யாரோ இவன் … என் பூக்களின் வேரோ இவன் , என் பெண்மை வென்றான் இவன் அன்பானவன்” என்று அவளின் கை பேசி அவள் எண்ண ஓட்டங்களுக்கு பதில் அளிப்பதை போன்று சிணுங்கியது … அழைத்தது  ராகுல் .. அவள் அந்த பெயரை பார்த்த உடன் எரிச்சலில் அந்த அழைப்பை நிராகரித்தால்.

—–தொடரும்

This entry was posted on August 9, 2013. 2 Comments

நாயகியின் சாதுர்யம் சீனு , சீனின் நாயகன் சீப்பு …தமிழனின் நாகரீகம் டாப் !

(என்ன செய்ய.. இப்படிஎல்லாம் தலைப்பு வைத்து தான் வாசகர்களை ஈர்க்க வேண்டி இருக்கு :P)

ஒரு  சிறிய  பையில் எத்தனை பொருட்கள் இருக்கிறது, எத்தனை அடங்கும்  என்று  ஒவ்வொரு ஆணும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு  திணிக்கப்பட்டிருக்கும் பை ஒரு பெண்ணின் கைப்பையே ஆகும். (இதை படிக்கும் ஆண்களே !  ஒரு பெண்ணின் பையில் இருப்பவற்றை யூகிக்க முயலாதீர் . அது உங்கள் கற்பனை திறனுக்கு அப்பார்ப்பட்டது :p பெண்ணிற்கே அவள் பையில் இருக்கும் அத்தனையும் தெரிய வாய்ப்புகள் கம்மி !) அப்படி பெரிதாய் என்ன இருக்க போகிறது எல்லாம் மேக் அப் சாதனங்கள் தானே என்று அலுத்துக்கொள்ளும் மக்களுக்கு(என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் !) , அவை அவளை அழகு படுத்த மட்டுமல்ல அவசரத்தில் உதவவும் செயலாம்  என்பதை புரிய வைக்கவே இந்த தொகுப்பை பதிவு செய்ய விரும்பி எழுதுகிறேன் .

அந்த காலத்து தமிழச்சி தன் காதில் அணியும் குண்டலத்தை வைத்தே புலியை  விரட்டி அடித்ததாக யாரோ சொல்லி கேள்விப்பட்ட ஞாமகம்(யாரோ சொல்லியா ?!? என்று கோபித்து கொள்ளும் தமிழ் பற்று உள்ளவர்களே .. என்னை மன்னிக்கும் .நான் ஆங்கிலம் எழுதி படிக்க தெரிந்தால் பெரிய ஆள்(?!) என்று போற்றி வாழும் சமூகத்தில் வாழ்பவள் 😦  ) . இப்போது நான் பகிர்ந்துகொள்ள போகும் நிகழ்வு  அதுபோன்ற வீர தீர செயல் பற்றி இல்லை என்றாலும் அதை தழுவியது என்று வைத்துகொள்ளலாம். ஹைப் போதும் விஷயத்துக்கு வருவோம் .

மதியம் நெருங்கும் நேரம் . குளிர்சாதன பேருந்தில் நான் எனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன் . என்னை போன்று வெளிநாட்டு மனிதர்களுக்கு, அவர்களது நேரத்தின் படி நம் நாட்டிலிருந்து உழைத்து கொடுக்கும் பெரிய மனம் படைத்த(!?!) மற்றும் சிலர் ( ஐ .டி கம்பெனிகாரர்களே தான் )என்னுடய  சகபயணிகள்.
தங்கள் நாளை காதில் ஹெட் செட்டுகளை பொறுத்திக்கொண்டும் ,தங்கள் லேப்டாப் என்னும் குழந்தையை மடியில் வைத்து கொஞ்சிய வண்ணம் பயணித்தனர் .நான் அமர்ந்திருந்த சீட்டின் எதிபுரம் இரண்டு சீட்டுகள் தள்ளி அமர்திருந்த  பயணி ஒருவர் சீட்டின் பின் புறம் கையை விட்டு எதையோ நோண்டி கொண்டிருந்தார் .இப்படியும் அப்படியுமாக அவர் நெளிந்து  கொண்டிருப்பது என் கண்களில் பட்டது .திடீரென்ன அவர் கைகளை உயர்த்தி நடத்துனரை நோக்கி சைகை  காண்பித்தார்   .
பயணி : என் பென் டிரைவ் சீட்டின் இடுக்கில் விழுந்து விட்டது .
நடத்துனர் : (புன்முறுவலுடன் ) எடுத்து கொள்ளுங்கள் .இதற்கு என் அனுமதி எதற்கு ?
பயணி : இல்லை .எடுக்க முடியவில்லை .
நடத்துனர் : அப்போ என்ட கேட்டா என்ன சார் பண்ண முடியும் ?  முடிஞ்ச  வரை முயற்சி பண்ணுங்க இல்லை அது போகுதுன்னு விடுங்க .
பயணசீட்டு கொடுப்பதில் அவர் கவனம் செல்லுத்த ஆரம்பித்தார் .
பயணி அருகில் இருந்த மற்றொருவரை முயற்சி செய்ய கூறி வேண்டி கொள்ள அவர் முயன்றார் . முடியலில்லை .
சமூக அக்கறையோடு  நீலமான ஒல்லியான கருவி கொண்டு  எடுக்க முயலுங்கள் என என் கருத்தை பதிவு செய்ய வாயெடுத்தேன் .  பின்பு அப்படி ஒரு கருவிக்கு நான் எங்கு போக ? என்னவே  சுற்றி இருந்தவர்கள் அமைதி காக்க நானும் மௌனமாய்  வேடிக்கையளரானேன் .

முன் சீட்டில்    இருந்த பெண்  ஒருத்தி தன் கை பையில் இருந்த சீப்பை நீட்ட அந்த பயணி புரியாது முழித்தார் .”அட இதை விட்டு அந்த பென் டிரைவ் யை கீழே தள்ளி எடுங்கள்”  என்று அறிவுறுத்த பென் டிரைவ் கைப்பற்ற பட்டது .அட!! சீப்பு அவள் கூந்தல் சீராக இருப்பதை  மட்டும்மல்ல அவள் மூளையும் சீராகவே இருப்பதை அறிய வைத்தது !! 🙂 பென் டிரைவ் வை பெரும் (?!) போரட்டத்துக்கு பின் மீட்ட அந்த பயணி , தக்க சமயத்தில் சாமர்த்தியமாக யோசித்து 400 ரூபாயை சேமித்து கொடுத்த அந்த பெண்ணிற்கு, புன்முறுவலுடன் மனதார இல்லை என்றாலும் வார்த்தையாக தேங்க்ஸ் என்று சொல்லிருந்தால் குறைந்துபோய் இருப்பாரோ ?!?

பின் குறிப்பு : பகிர்ந்து கொண்ட நிகழ்வு பெரிய அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நன்றி மறப்பது நன்றன்று என்று எழுதி வைத்த தமிழ்நாட்டில் உதவி செய்தவரை மதிக்கும் பண்பாடு கூட இல்லாமல் போயிற்றோ ??!!??
செய்நன்றியை மதிக்காமல் வாழும் மக்கள் கொண்ட  சமூகம் பயணிப்பது எதை நோக்கியோ?

என் கனவில்

 என் நெஞ்சு  துடிப்பின் சங்கீதத்தில் நீ உறங்குகையிலே …..
நீ என் மேல் உறங்கும் சுகத்தை நான் ரசிக்கையிலே …

நீ உறங்கும் அழகைக் கண்டு என் நெஞ்சு ஏங்குதே …
அதனால் நான் விடும் பெரு மூச்சு உன்னை எழுப்புதே ..

கண்கள்  சோர்ந்த பின்பும் .. கண்  முழித்திருக்கும் சுகம் ..
 என்னால் உணர முடியும் ..

உன்  ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும்
நான்  அடைகிறேன் மறு ஜென்மம் ..

நீ உறங்கி நான் பார்க்க
இது என்ன வரமென்ன நான் கேட்க

நான் கண்ட அழகை வர்ணிக்க 
கவிதையாய்  அது உருவெடுக்க !!!

Image

A small attempt :)

First things first … A big thank you for deciding to read my write up ! 🙂 See I am acting so kind here, in turn I expect you to be kind and read this fully and pour in your comments !

P.S   : Note the word acting kind …so atleast  I expect  that  :p 😉

I am neither a professional writer nor very efficient in choice of words ( which I think is key factor to attract audience ). But still, writing is not new to me so I decided to pen down my thoughts- but only this time in English for two major reasons:

  1. To some of my near and dear ones who sincerely wished I could convey my views in English so that they won’t have trouble in understanding-this one is for you 🙂  (Now all I really wish is that you people don’t jump into conclusion of what a blunder that was!).
  2. I wanted to test my English writing skills! (Is it ok to rephrase it as wanting to share my English proficiency with you?)

To be frank I am finding it hard to choose the words to frame my sentences (attracting audience concept). So my test result seems to be negative. Never mind I dint want to back off so I tried looking into thesaurus for I wanted some good replacement of certain words so that I could pretend that I do posses good writing skills ! But then … ting – sound of bulb in my mind.. What if that ended like Joey’s recommendation letter for Chandler and Monica in F.R.I.E.N.D.S series! ?! For those who haven’t watched that scene ,

so I dropped the idea of referring to thesaurus and decided to use simple terms and avoid complications.

Being simple and avoiding complications ..fine but what exactly do I wish to convey in this post? Clueless? So was I. I wished to talk about so many stuffs on earth that I was actually confused on what to choose and how to start. Finally I settled for easiest zone Love!

I suppose there is not a soul who wouldn’t want to taste it .Some are yet to find love ,some are lucky enough to get the ones they really love and live happily ever after ( happily ever after? that too after marriage?  saving this for some other day ),while the others love the ones they are destined to. However the situation is, one cannot escape from loving or being loved. But

What are the odds of falling in love at first sight?! Does love at first sight really exists ?

A question to which I always get mixed replies, not only from outside but also within myself ! Sometimes when I hear stories of people falling for others at first sight I think ‘oh what a story! May be love at first sight  do exists!’ but immediately the other personality in me pops out saying ‘hey dumbo ! Are you ready to believe whatever story that person is cooking up? If love at first sight happens how can there be only one love for one life?(is there really only one love for one life?  A million dollar question! ) , what about the cases  where friends for lifetime suddenly fall in love ?Moreover if love blossoms at first sight why are they breaking up soon after falling into love trap? If there is love at first sight then when does other emotions like crush infatuation and lust start? Don’t all these come at first sight? If the answer to this question is yes then how to classify these and come to conclusion that it is actually love and not the ones mentioned above?’

The split personality in me made my rusty mind to ponder over this while I was busy going to my office just to sign and get back. No wonder idle mind is devil’s workshop! The following lines belong to my mind voice.

‘ If love at first sight works perfect then why it is sometimes just one sided? Is it the bearable blunder of cupids working 24*7 or is it because they want to have some fun at work hours ?

And is it really LOVE at first sight or just  the impression that is imprinted on our minds at first sight? Are those impressions deceived as love? What about the  bonding that comes out of long term friendships ? Does a secret trigger of love blossom really exist ? ‘ My mind wanted to consult my heart which is when it noted that my heart in coordination with my eyes was busily surfing for my love (at first sight )! :p

This entry was posted on April 26, 2013. 4 Comments

அவன் மனதில் அவள் …… அவள் மனதில் ?

காதல் !!  ஏழை பணக்காரன் , ஜாதி மதம் , நிறம் குணம் இவை எதையும் பார்த்து வருவதன்று .. சொல்லமுடியாத சுகத்தையும் தாங்க முடியாத துயரத்தையும் கொடுப்பது தான் காதல் !!  அவன் மனதில் அவள் மேல் காதல் …… ஆனால் அவள் மனதிலோ .. தொடர்ந்து படியுங்கள் !!

அவன் என்றும் போல் இன்றும் அந்த தெரு முனையில் அவளுக்காக காத்திருந்தான் . எவ்வளவு நேரமானாலும் அவள் வந்த பிறகே அந்த இடத்தை விட்டு அவன் நகருவான் . அவன் அவளைச் சந்தித்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது . அனால் ஆறு ஜென்மங்கள் வாழ்ந்து ஏழாவதில் இணைய   காத்திருப்பது போன்ற உணர்வு அவனுள் !!!

இன்னும் அவன் அவளிடம் முழுமையாக மனம் விட்டு  பேச கூட  ஆரம்பிக்கவில்லை . ஏன் .. அவள் பெயரைக் கூட அவள் தோழி அவளைக் கூபிடுவதன் மூலமே அறிந்து கொண்டன் ! ஆனால் கனவில் அவளுடன்  வாழ்ந்து கொண்டிருந்தான் .

அவள் அவனை ஏற்றுக்கொள்வாள் என்று சிறிதளவும் அவனுக்கே நம்பிக்கையில்லை . ” அவ ரேஞ்சு எங்க நம்போ எங்க ” என்று அடிகடி அவன் மூளை அவனை அறிவுறுத்தினாலும் “காதலுக்கு கண்ணில்லை” என்று அவன் மனம் அவனது மூளையை சமாதனப்படுத்தும் .

அவன் அவளுக்காக காத்திருந்த படி கனவில் அவளுடன் டூயட் பாடியபடி இருக்க , வான் இறங்கி வந்த தேவதையைப் போல் அவள் அவனை நோக்கி நடந்து வந்தாள் . அவளைக்  கண்ட அவனது  மனம்  பலூனை பார்த்த பிள்ளை போல துள்ளி குதித்தது .இதழ்கள் தானாய்  விரிந்தது . பதிலுக்கு மொட்டு மலர்வது போன்று அவளும் அழகாய் சிரித்தாள் .

அதே வசீகரம் ! அவள் அருகில் வர வர அவன் இதய துடிப்பு வேகமாய் தாளம் போடா அதற்கு சம்பந்தமே இல்லாமல் வயிற்றில் பட்டாம்பூசிகள் ஆட  செய்வதறியாது  வேர்த்து விறுவிறுத்து போனான் . அவள் பதுமை போல் அவன் அருகில் வந்து நின்றாள் .” ரொம்ப நேரம் ஆச்சா  நீங்க வந்து ?” என கொஞ்சும் தமிழில் கொஞ்சலாய் கேட்டாள்(அவனுக்கு அப்படி கொஞ்சலாய் தோன்றியது ) “இல்லை இல்லை .. இப்ப தான் ” என்று அவசரமாய் பதில் அளித்தான் .

” சரி ” என்று புன்முறுவலுடன் தட்டை எடுத்து அவன் முன் நீட்டியபடி ” உங்க பானி பூரில இருக்கற சுவை வேறு எந்த கடையிலும் இல்லவே இல்ல .. அப்படி ஒரு தனி சுவை …பின்னிடீங்க போங்க ” என்று   சிரித்த படியே அவன் தட்டில் வைக்கும் ஒரு ஒரு பூரியையும் ரசிச்சு ருசிச்சு சாப்பிட்ட பின்  பத்து ரூபாயை நீட்டி “நாளைப் பார்க்கலாம் பை ” என்று கூறி தன் ஹாஸ்டலை நோக்கி நடந்தாள் .

அவன் மனதில் அவள் … அவள் மனதில் அவன் தயாரிக்கும் பானி பூரி !!:p 🙂 😦

This entry was posted on April 11, 2013. 2 Comments

சந்திபேன்னா மீண்டும் சந்திபேன்னா !?!

(தலைப்பைப் படித்து விட்டு இது காதல் கதையின் தொகுப்பு என எண்ணிய உள்ளங்கள் என்னை மனிக்கவும் .இது எனக்கு முகம் மட்டுமே பரீட்சயமான ஒரு முதியவரைப்  பற்றிய தொகுப்பு.)

அது அவரது காலைப் பயிற்சி நேரமாக இருக்கலாம் …. பால் நாளிதழ் என பொருட்கள் ஏதேனும் வாங்க செல்லும் நேரமாக இருக்கலாம் ….பிழைப்பை நாடி செல்லும் பொழுதாகவும் இருக்கலாம் … எதுவாக இருப்பினும் அவர் அந்த தெருவைக் கடந்து செல்லும் நேரம் – என் கல்லூரி பேருந்தை நான் பிடிக்க விரையும் நேரம் !

சுமாரான உயரம் , வசீகரமான முகம் ,வெள்ளை வெட்டி சட்டை , தந்தை பெரியார் போன்ற நீளமான வெள்ளை தாடி , கண்களில் கோல்ட் ப்ளேடெட் கண்ணாடி , தளர்ந்த நடை -இவை அவரின் அடையாளம்.

தினமும் காலை 7.15 மணி அளவில் யார் அந்த தெருவைக்  கடந்து சென்றாலும் அவரையும் கடந்து சென்றாக வேண்டும் .நானும் அதற்கு விதி விளக்கல்ல ! சுருங்க கூறின் அவர் என் மணி கூண்டு .. அவரை என் வழியில் சந்திக்காவிடின் என் கல்லூரி பேருந்தை அன்று நான் தவற விட்டேன் என்று உறுதியே செய்துவிடலாம் . நான் கல்லூரிக்கு சென்ற நாட்களில் அவரை கண்டிராமல் இருந்ததே இல்லை. என் கடிகார முள் தப்பினாலும் அவரது வருகை தவறவில்லை .

முதல் இரண்டு ஆண்டுகள் சரியான மணியை அறியவே அவரை நாடிய நான் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் பைரவர் என்னை பின்தொடரை ( நாய் ஒன்று என்னை துரத்தியதை நாசூக்காக வேறு எப்படி சொல்ல?  ) “தாத்தா ” என அவர் முதுகின் பின் தஞ்சம் புகுந்தேன் . பைரவரை அவர் அனுப்பிய பின் என்னை பத்திரமாக போகும்படி அக்கறையாய் அறிவுரைத்தார் .

அன்று முதல் அவரைப் பார்க்கும் போது இதழ் புன்முறுவல் பேசும் !! ( அதற்கு மேல் எனக்கு நேரம் இருந்ததில்லை .. பேருந்து போய்விடுமே !) பதிலுக்கு அவரும் புன்னகைக்க மறக்கவில்லை ! அவரது புன்னகை கரிசனமானது. கண்களில் ஒரு தேஜஸ் கலை . அதனை காணும் பொது எல்லாம் என் மனதில் ஒரு நிம்மதி , நேரம் காலம் தெரியாமல் பேசி உரையாடிய ஒரு திருப்தி . இதை கண்டே துவங்கும் என் நாளின் மற்றைய பொழுதும் சுகமாய் அமைவதாய் ஒரு நினைப்பு .

என்றும் போல் அந்நாள் இருந்திருக்கவில்லை . அவரை அன்று நான் சந்திக்கவில்லை . ஏனோ அதை நினைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. ஒரு நாள் ஒரு வரமானது . அவரின் புன்முறுவலை காணத்து நாட்கள் கனமாகின ! ஒரு பக்கம் அவர் ஆரோக்கியத்திற்கு குறை வராமல் இருக்க நெஞ்சம் கடவுளை  கெஞ்சின , மறு பக்கம் உறவே இல்லாத ஒருவருக்காக வேண்டுவதை கண்டு குழம்பின !!

மூன்று மாதங்கள் ஓடின . திக்கு தெரியாத கப்பலுக்கு கலங்கரை விளக்கம் கண்ணில் பட்டதை போல் அவர் என் கண்ணில் பட்டார் . ஆம் அதே புன்முறுவலுடன் !! அவரைக் கண்டு மகிழ்தேன் நெகிழ்தேன் அவரிடம் விரைந்தேன் . ” ஏன் தாத்தா இவ்ளோ நாள் வரல ?” வினவினேன் . பலமாக சிரித்தார் . நான் மற்ற கேள்விகளை மறந்தே போனேன் . “சுகமா ?” என்றார் . “சுகமே ” என்றேன் அவரைக் கண்ட மகிழ்ச்சியில் .  “நன்றாய் படி நலமாய் இரு ” என்றார் . தொடந்து பேச வாய் எடுத்தேன் ….. பாம் பாம் .. என் கல்லூரி பேருந்து அழைத்தது . என்னை சென்று வரும் படி கண்ணால் சைகை செய்தார் .
நான் போகும் வரை என்னை பார்த்து புன்னகைத்தார் . என் நெஞ்சில் இருந்த புண்ணை அடைத்தார் !!

அன்று முதல் இன்று வரை அவரை சந்திக்க முடியவில்லை … அவரது வாழ்த்தை இன்று வரை மறக்கவே முடியவில்லை .. சந்திபேன்னா அவரை மீண்டும் சந்திபேன்னா !?!

This entry was posted on April 8, 2013. 1 Comment

அனுபவம் புதிது !! :)

என் எண்ணங்களை பதிவாக்க எனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு …
 நான் தொகுத்த அறிக்கைகள் .. வெளியிட்ட குமுதம் சிநேஹிதி வார பத்திரிக்கைக்கு என் நன்றிகள்

வாய்ப்பளித்த குமுதம் சிநேஹிதி எடிட்டர் மிஸ் .லோகநாயகி  அவர்களுக்கு என் நன்றிகள் !!!

 

Image

 

ImageImage

This entry was posted on April 8, 2013. 2 Comments

எனக்கு வேலைப் பெற்று தந்த வரிகள் !

என் முதல் நேர்காணலின் போது என் உணர்சிகளை பதிவு செய்ய 5 நிமிடங்கள் கொடுத்து எழுதப்பட்ட வரிகள் ..

அதிகாலை பொழுது
அருமையான தருணம்
துடிக்கிறேன் தவிக்கிறேன்
தருணத்தின் முடிவு
இன்ப வாழ்வின்
ஆரம்பமாய் அமைய …….

 

Image