நாயகியின் சாதுர்யம் சீனு , சீனின் நாயகன் சீப்பு …தமிழனின் நாகரீகம் டாப் !

(என்ன செய்ய.. இப்படிஎல்லாம் தலைப்பு வைத்து தான் வாசகர்களை ஈர்க்க வேண்டி இருக்கு :P)

ஒரு  சிறிய  பையில் எத்தனை பொருட்கள் இருக்கிறது, எத்தனை அடங்கும்  என்று  ஒவ்வொரு ஆணும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு  திணிக்கப்பட்டிருக்கும் பை ஒரு பெண்ணின் கைப்பையே ஆகும். (இதை படிக்கும் ஆண்களே !  ஒரு பெண்ணின் பையில் இருப்பவற்றை யூகிக்க முயலாதீர் . அது உங்கள் கற்பனை திறனுக்கு அப்பார்ப்பட்டது :p பெண்ணிற்கே அவள் பையில் இருக்கும் அத்தனையும் தெரிய வாய்ப்புகள் கம்மி !) அப்படி பெரிதாய் என்ன இருக்க போகிறது எல்லாம் மேக் அப் சாதனங்கள் தானே என்று அலுத்துக்கொள்ளும் மக்களுக்கு(என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் !) , அவை அவளை அழகு படுத்த மட்டுமல்ல அவசரத்தில் உதவவும் செயலாம்  என்பதை புரிய வைக்கவே இந்த தொகுப்பை பதிவு செய்ய விரும்பி எழுதுகிறேன் .

அந்த காலத்து தமிழச்சி தன் காதில் அணியும் குண்டலத்தை வைத்தே புலியை  விரட்டி அடித்ததாக யாரோ சொல்லி கேள்விப்பட்ட ஞாமகம்(யாரோ சொல்லியா ?!? என்று கோபித்து கொள்ளும் தமிழ் பற்று உள்ளவர்களே .. என்னை மன்னிக்கும் .நான் ஆங்கிலம் எழுதி படிக்க தெரிந்தால் பெரிய ஆள்(?!) என்று போற்றி வாழும் சமூகத்தில் வாழ்பவள் 😦  ) . இப்போது நான் பகிர்ந்துகொள்ள போகும் நிகழ்வு  அதுபோன்ற வீர தீர செயல் பற்றி இல்லை என்றாலும் அதை தழுவியது என்று வைத்துகொள்ளலாம். ஹைப் போதும் விஷயத்துக்கு வருவோம் .

மதியம் நெருங்கும் நேரம் . குளிர்சாதன பேருந்தில் நான் எனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன் . என்னை போன்று வெளிநாட்டு மனிதர்களுக்கு, அவர்களது நேரத்தின் படி நம் நாட்டிலிருந்து உழைத்து கொடுக்கும் பெரிய மனம் படைத்த(!?!) மற்றும் சிலர் ( ஐ .டி கம்பெனிகாரர்களே தான் )என்னுடய  சகபயணிகள்.
தங்கள் நாளை காதில் ஹெட் செட்டுகளை பொறுத்திக்கொண்டும் ,தங்கள் லேப்டாப் என்னும் குழந்தையை மடியில் வைத்து கொஞ்சிய வண்ணம் பயணித்தனர் .நான் அமர்ந்திருந்த சீட்டின் எதிபுரம் இரண்டு சீட்டுகள் தள்ளி அமர்திருந்த  பயணி ஒருவர் சீட்டின் பின் புறம் கையை விட்டு எதையோ நோண்டி கொண்டிருந்தார் .இப்படியும் அப்படியுமாக அவர் நெளிந்து  கொண்டிருப்பது என் கண்களில் பட்டது .திடீரென்ன அவர் கைகளை உயர்த்தி நடத்துனரை நோக்கி சைகை  காண்பித்தார்   .
பயணி : என் பென் டிரைவ் சீட்டின் இடுக்கில் விழுந்து விட்டது .
நடத்துனர் : (புன்முறுவலுடன் ) எடுத்து கொள்ளுங்கள் .இதற்கு என் அனுமதி எதற்கு ?
பயணி : இல்லை .எடுக்க முடியவில்லை .
நடத்துனர் : அப்போ என்ட கேட்டா என்ன சார் பண்ண முடியும் ?  முடிஞ்ச  வரை முயற்சி பண்ணுங்க இல்லை அது போகுதுன்னு விடுங்க .
பயணசீட்டு கொடுப்பதில் அவர் கவனம் செல்லுத்த ஆரம்பித்தார் .
பயணி அருகில் இருந்த மற்றொருவரை முயற்சி செய்ய கூறி வேண்டி கொள்ள அவர் முயன்றார் . முடியலில்லை .
சமூக அக்கறையோடு  நீலமான ஒல்லியான கருவி கொண்டு  எடுக்க முயலுங்கள் என என் கருத்தை பதிவு செய்ய வாயெடுத்தேன் .  பின்பு அப்படி ஒரு கருவிக்கு நான் எங்கு போக ? என்னவே  சுற்றி இருந்தவர்கள் அமைதி காக்க நானும் மௌனமாய்  வேடிக்கையளரானேன் .

முன் சீட்டில்    இருந்த பெண்  ஒருத்தி தன் கை பையில் இருந்த சீப்பை நீட்ட அந்த பயணி புரியாது முழித்தார் .”அட இதை விட்டு அந்த பென் டிரைவ் யை கீழே தள்ளி எடுங்கள்”  என்று அறிவுறுத்த பென் டிரைவ் கைப்பற்ற பட்டது .அட!! சீப்பு அவள் கூந்தல் சீராக இருப்பதை  மட்டும்மல்ல அவள் மூளையும் சீராகவே இருப்பதை அறிய வைத்தது !! 🙂 பென் டிரைவ் வை பெரும் (?!) போரட்டத்துக்கு பின் மீட்ட அந்த பயணி , தக்க சமயத்தில் சாமர்த்தியமாக யோசித்து 400 ரூபாயை சேமித்து கொடுத்த அந்த பெண்ணிற்கு, புன்முறுவலுடன் மனதார இல்லை என்றாலும் வார்த்தையாக தேங்க்ஸ் என்று சொல்லிருந்தால் குறைந்துபோய் இருப்பாரோ ?!?

பின் குறிப்பு : பகிர்ந்து கொண்ட நிகழ்வு பெரிய அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நன்றி மறப்பது நன்றன்று என்று எழுதி வைத்த தமிழ்நாட்டில் உதவி செய்தவரை மதிக்கும் பண்பாடு கூட இல்லாமல் போயிற்றோ ??!!??
செய்நன்றியை மதிக்காமல் வாழும் மக்கள் கொண்ட  சமூகம் பயணிப்பது எதை நோக்கியோ?

Leave a comment